Seed Certification
விதை சேமிப்பு :: அமைப்புகள்

உயிரற்ற காரணிகள்

நுண்ணுயிர், பூச்சிகள், சிலந்திகள்

இவ்வகை உயிரினங்களின் தாக்குதலால் விதைகளின் வீரியத்தன்மை குறைந்துவிடும். நுண்ணுயிரிகளின் செயல்பாட்டை, கட்டுப்படுத்துவது விதையின் ஈரப்பதம், வெப்பநிலை மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஈரப்பதம் போன்றவை பூஞ்சாணக்கொல்லியில் நேர்த்தி செய்யப்படும் விதைகள் நீண்டகாலம்  சேமிக்கும் திறன் பெற்றிருக்கும். வாயு நச்சுவைக் கொண்டு விதைகளை நேர்த்தி செய்தால், அதிக நேரம் விதைகளை சேமிக்க முடியும்.

வாயு நச்சு மீத்தைல் ப்ரோமைட், ஹைட்ரஜன் சயனைடு, எத்திலின் டைக் குளோரைடு, கார்பன் டெட்ரோ குளோரைடு கார்பன் டை சல்பைட் மற்றும் நாப்தலீன் (ம)அலுமினியம் பாஸ்பின்.

உயிரற்ற காரணிகள்
சுற்றுச் சூழல் ஈரப்பதம்

காற்றின் ஈரப்பதம் என்பது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் காற்றின் அதிகபட்ச ஈரப்பதத்தை தக்கவைக்கும் திறனில் உள்ள உண்மையான ஈரப்பதத்தின் விகித அளவு ஆகும். காற்றின் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை ஆகிய இரண்டும் விதையின் சேமிப்பு காலத்தைப் பாதிக்கும் காரணிகள் ஆகும். வெளிப்புறக் காற்று மண்டலத்தில் உள்ள ஈரப்பதத்தில் வைக்கப்படும் பொழுது விதைகள் ஒரு குறிப்பிட்ட மற்றும் தனித்துவமான ஈரப்பதத்தை அடைகின்றன. இந்தத் தனித்துவமான ஈரப்பதம் தான் நிலையான ஈரப்பதம், ஒரு குறிப்பிட்ட காற்றின் ஈரப்பதத்தில், வெப்பநிலை குறையும் பொழுது அதிகரிக்கும். சேமிப்பில் விதையின் ஈரப்பதமானது காற்றிலுள்ள வெப்பத்தை காட்டிலும் அதன் ஈரப்பதத்தைக் கொண்டே இயங்குகிறது.

இந்த நிலையான ஈரப்பதத்தின் விதையின் ஈரப்பதமானது ஏற்றம் மற்றும் இறக்கம் இல்லாமல் நிலைத்து இருக்கும்.

வெப்பநிலை

வெப்பநிலை வாழ்நாள் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. வெப்பநிலை அதிகரிக்கும் பொழுது பூச்சிகள் மற்றும் பூஞ்சாணங்களின் தாக்குதலும் அதிகரிக்கும். விதையின் ஈரப்பதம் அதிகபட்சமாக இருக்கும் பொழுது வெப்பத்தில் தாக்குதல்  இருக்கும். சேமிப்பின் பொழுது வெப்பநிலை மற்றும் விதை ஈரப்பதம் குறைப்பது விதையின் தரத்தை மேம்படுத்தும் முறைகளாகும். ஹாரிங்டன் கோட்பாடுகள் ஈரப்பதம் மற்றும் விதையின் வெப்பநிலைக் கொண்டு விதைத் தரம் மாறுபடுவதைக் கண்டறிந்துள்ளனர். அவை.

  1. ஒவ்வோர் 1 சதவிகிதம் ஈரப்பத வீழ்ச்சிக்கும் விதை வாழ்நாள் இரட்டிப்பாகிறது. இது 5-14 சதவிகிதம் வரை உள்ள ஈரப்பதத்திற்குப் பொருந்தும்.
  2. ஒவ்வோர் 5 டிகிரி செ வெப்பநிலை குறையும் போது வாழ்நாள் இரட்டிப்பாகும். இது 0-5 டிகிரி வரையில் பொருந்தும்.
  3. சேமிப்புச் சூழலில் ஈரப்பத சதவிகிதம் 45 (அ) அதற்கு மிகாமல் இருந்தால் நல்லதொரு விதைச் சேமிப்பு இருக்கும். இச்சூழலில் தனி ஈரப்பதத்துடன் மற்றும் வெப்பமும் தனித்து 50 டிகிரி செ மிகாமல் இருக்கவேண்டும்.

மும்முனை வழிப்படம்

ராபர்ட்ஸ் (1972) என்பவர் வெப்பநிலை, விதை ஈரப்பதம் மற்றும் வீரிய காலம் ஆகிய மூன்று காரணிகளுக்கு உள்ள தொடர்பினை ஒரு கோட்பாட்டின் மூலம் விளக்குகிறார். இந்தத் தொடர்பினைக் கொண்டு ஒரு விதை வீரிய மும்முனை வழிப்படம் விளக்கப்பட்டது. குறிப்பிட்ட சேமிப்புச் சூழலில் உள்ள விதையின் வீரியம் பற்றிய விளக்கப்படம் தான் இது.

விதையின் வீரியத்தை தக்க வைக்கும் காலத்தை நிர்ணயிக்கக்கூடிய வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் பிணைப்பை இவ்வழிப்படம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

வாயு மூலம் சேமிப்பு

அதிக ஆக்சிஜன் அழுத்தம் விதையின் வீரிய காலத்தைக் குறைக்கும். கார்பன் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆகியவை விதையின் சேமிப்புக் காலத்தை அதிகரிக்கும்.

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.

Fodder Cholam